பெங்களூரு: சந்திரயான்3 விண்கலத்தின் 5வது மற்றும் இறுதி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. அடுத்து ஆகஸ்ட் 1, 2023 அன்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி Hope TransLunar Injection (TLI), நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விண்வெளித்துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் நிலவின் மறு பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா கடந்த 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் நண்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல் 41 நாட்கள் பயணத்திற்கு பின்னர் நிலவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த 20ம் தேதி பூமியின் மூன்றாவது சுற்றுவட்ட பாதையிலிருந்து, 4வது சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது சந்திரயான்3 விண்கலத்தின் 5வது மற்றும் இறுதி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. அடுத்து ஆகஸ்ட் 1, 2023 அன்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி Hope TransLunar Injection (TLI), நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த முறை நிலவில் தரையிறங்க முயன்றபோதுதான் சந்திரயான்-2 தோல்வியில் முடிந்த நிலையில் இந்த முறை எந்த தோல்வியும் ஏற்படாதவாறு இஸ்ரோ சந்திரயான்-3 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.